மேலும்

மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவின் ரொறன்ரோ நகரில் உடல்நலன் குறைவினால் காலமானார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.தினக்குரல்  நாளிதழில் ஊடகவியலாளராகப் பணியைத் தொடங்கி, அதன் ஆசிரியர் பதவி வரை ஊடகத்துறையில் உயர்ச்சி பெற்ற சபேஸ்வரன், போர்க்காலத்தில் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியிருந்தார்.

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக பணியாற்றிய சபேஸ்வரன், யாழ் ஊடக மையத்தின் தலைவராகவும் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற சபேஸ்வரன் அங்கு  சாவைத் தழுவியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஊடகவியலாளர் சபேஸ்வரன், யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *