எரிபொருள் விலைகள் 10 வீதம் வரை உயரும்?
சிறிலங்காவில் எரிபொருள்களின் விலைகள் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக் கூடும் என சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு நெருக்கடியின் விளைவாக ஏற்படும் அதிக இறக்குமதி செலவுகளால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், அண்மைய விலை உயர்வை இது மிஞ்சக் கூடும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்து செலவுகள் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் ஆகியவை இந்த விலை உயர்வில் கணிசமாக பங்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 5 முதல் 10 சதவீதம் வரை விலை அதிகரிப்பு இருக்கலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு மோதல்களை அடுத்து, சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மார்ச் 10 நாள் கடைசியாக எரிபொருள் விலைகளை உயர்த்தியிருந்தது.
