சிறிலங்காவுடன் கலந்துரையாடவில்லை- ரஷ்ய தூதரகம் மறுப்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் ரஷ்ய தூதுவர் எல். ஜகரியன் (L. Dzhagarya) அண்மையில் நடத்திய சந்திப்பின் போது நிதி மற்றும் தளபாடச் சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்து, ஷ்ய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“ரஷ்ய தூதுவர் எல். ஜகரியன் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கு இடையே எரிசக்தி விநியோகம் தொடர்பாக நடைபெற்ற சந்திப்பு குறித்து, பல்வேறு ஊக அறிக்கைகள் பரவி வருகின்றன.
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையின்போது நிதி அல்லது தளபாடச் சிக்கல்கள் தொடர்பாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்று, தெரிவிக்க ரஷ்ய தூதரகம் அதிகாரம் பெற்றுள்ளது. ” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
