ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்
சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தப் போகிறது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
மூன்று நாட்களாக கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நேற்று வீடு திரும்பினார்.
சிறிலங்கா பிரதமராக அனுரகுமார திசநாயக்கவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று நேற்றிரவு சமூக வலைத்தளங்களில் பரவிய போலிச் செய்தியால் குழப்பம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐதேகவை, 14 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறது என்று சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார், மகிந்த ராஜபக்ச.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் சற்று முன்னர். இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.