அரசு அதிகாரிகளுக்கு வந்துள்ள சோதனை
கடந்த மாதம், 29ஆம், மற்றும் 30ஆம் நாள்களில், சிறிலங்கா நாடாளுமன்றம் இரண்டு பிரேரணைகளை நிறைவேற்றியது. அதாவது பிரதமர் அலுவலகம், அமைச்சரவை மற்றும் மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழுள்ள அனைத்து அமைச்சுக்களுக்குமான நிதி வழங்கலை தடுக்குமாறு கோரியே இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.