மேலும்

நாள்: 4th December 2018

அரசியல் நெருக்கடிக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு – சிறிலங்கா அதிபர்

ரணில் விக்கிரமசிங்கவின் மோசமான தீவிர இடதுசாரி தாராளவாத அரசியலை சிறிலங்கா சுதந்திர கட்சி தோற்கடிக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலர்களும் பதவியிழப்பு?

அமைச்சரவை  கலைக்கப்பட்டதை அடுத்து, அமைச்சுக்களின் செயலர்களும் பதவி இழந்து விடுவார்கள் என்றும்,  இதனால் தற்போது சிறிலங்காவில் அமைச்சுக்களின் செயலர்கள் எவரும் பணியாற்ற முடியாது எனவும் சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணை – நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தை கலைத்து  சிறிலங்கா  அதிபர் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும் புறக்கணிக்கிறது மகிந்த தரப்பு

நாடாளுமன்றத்தின்  நாளைய அமர்வையும்,  புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

மகிந்தவின் முறையீட்டு மனு தாக்கல்- பரிசீலனை இல்லை

மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக,  இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகிந்தவும், கருவும் சந்தித்து பேச்சு

அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவும் கலந்துரையாடியுள்ளனர்.

புதிய பிரதமராக சமல் அல்லது நிமல் – சிறிலங்கா அதிபர் ஆலோசனை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த,  சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை, கூடிய விரைவில் பிரதமராக நியமிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  ஆலோசித்து வருவதாக, அதிபர் செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம் – சிறிலங்கா அதிபர் சாதகமான பதில்

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சாதகமான பதிலை அளித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை? – ஐதேகவின் அடுத்த நகர்வு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.