மேலும்

நாள்: 6th December 2018

நாடாளுமன்ற கலைப்பு அரசிதழ் மீதான இடைக்காலத் தடை நீடிப்பு  – நாளையும் விசாரணை

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழை இடைநிறுத்தி, பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் வரை நீடித்துள்ளது.

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வரும் பிரேரணை – ஐதேகவின் அடுத்த நகர்வு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் தேர்தல் நடத்துவதை நாங்கள் தடுக்கவில்லை – அமெரிக்க தூதுவர்

தற்போதைய அரசியல் நெருக்கடியை  வெளிப்படையான முறையில்,  ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு ஆண்டு தோறும் மனநிலை பரிசோதனை – சரத் பொன்சேகா

அமெரிக்காவில் உள்ளது போன்று ஒவ்வொரு ஆண்டும், சிறிலங்கா அதிபரின் மனநிலையைப் பரிசோதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

பதவி விலகி விடுவேன் – அச்சுறுத்திய சிறிசேன

தனக்கு நெருக்கடி கொடுத்தால், அதிபர் பதவியை விட்டு விலகி, பொலன்னறுவவில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதற்குப் போய் விடுவேன் என்று மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அட்மிரலுக்கு பிணை – கடுமையாக எச்சரித்த நீதிவான்

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று பிற்பகல் பிணையில் செல்ல கோட்டு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டார்.

மைத்திரியின் குடியுரிமையும் பறிபோகும் – விஜித ஹேரத்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல்களை புரிந்துள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரேரணையை கொண்டு வர முடியும். அதைவிட அவரது குடியுரிமையையும் பறிக்க முடியும் என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது – சட்டமா அதிபர் வாதம்

நாட்டினதும், ஆயுதப்படைகளினதும் தலைவர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரின் முடிவுகளுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் பரிசீலிப்பதற்கு, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய எதிர்ப்புத் தெரிவித்தார்.

அமைச்சுக்களின் செயலர்களுக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட முடியாது

பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன இல்லாத சூழ்நிலையில், தனது அதிகாரத்தின் கீழ் இல்லாத அமைச்சுக்களின் செயலர்களுக்கு, உத்தரவிடுவதற்கு சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என்று- முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.