மேலும்

நாள்: 23rd December 2018

வன்னியைப் புரட்டிப் போட்ட வெள்ளம் – 10 ஆயிரம் பேர் பாதிப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம், கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் புளோரிடாவுக்கு – விமான நிலையங்களுக்கு அறிவிப்பு

மன்னார் – சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் வரும் ஜனவரி மூன்றாவது வாரம், காபன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது.

நீதியரசர்கள் நியமனத்தில் சிறிலங்கா அதிபர் – அரசியலமைப்பு சபை இடையே இழுபறி

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களுக்கு, அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் பெயர்களை சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட நிதி உதவிகளை பெற வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு

அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.