மேலும்

நாள்: 19th December 2018

நாளை காலை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை காலை 8.30 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா ஆர்வம்

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கட்சி தாவிய எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி இல்லை – மைத்திரி எச்சரிக்கை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எந்தவொரு அமைச்சுப் பதவியையும் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

மைத்திரிக்கு மேலதிக அமைச்சுக்களை விட்டுக்கொடுக்க முடியாது – ஐதேக

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம்,  சட்டம், ஒழுங்கு மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தப்புமா மகிந்தவின் பதவி? – சுமந்திரனின் கேள்வியால் சிக்கல்

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விகளை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை முடிவை அறிவிக்கவுள்ளார் சபாநாயகர் கரு ஜெயசூரிய.

நாளை கொழும்பு வரும் ரஷ்ய போர்க் கப்பல்கள் அணி

ரஷ்யாவின் மூன்று போர்க் கப்பல்கள் நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு – சீனா வரவேற்பு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட்டிருப்பதை, சீனாவும் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், நேற்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.