மேலும்

நாள்: 16th December 2018

வேண்டா வெறுப்பாக ரணிலை பிரதமராக நியமித்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணிலை நியமித்தது ஏன்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.

சிறிலங்கா அரசியல் மாற்றங்களை வரவேற்கிறது இந்தியா

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா வரவேற்றுள்ளது. சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 52 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

நாட்டின் இறைமையை உறுதி செய்வார் ரணில் – நாமல்

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில்விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாட்டின் இறைமையை உறுதி செய்யும் விதத்தில் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பரபரப்பான சூழலில் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்

சிறிலங்காவின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார்.

ஐதேகவின் கதவைத் தட்டும் அங்கஜன் உள்ளிட்ட 21 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்றும், இதுதொடர்பாக உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு

மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பதவியை இழக்கிறார் சம்பந்தன்? – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த

அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரவாரமின்றி இன்று காலை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 10.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.