மேலும்

நாள்: 7th December 2018

பதவியிழந்த அமைச்சர்கள் புடைசூழ இரணைமடுவுக்கு வந்த மைத்திரி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவு ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால  சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற கலைப்பு – திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு?

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்றிரவு கூடுகிறது சுதந்திரக் கட்சியின் செயற்குழு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாக, கட்சியின் செயலர் பேராசிரியர் லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

தனியார் விடுதிகளில் கூட்டங்களுக்கு தடை – சிறிலங்கா அதிபர் உத்தரவு

சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகளுக்கு அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியில் இருந்து ஓரம்கட்ட முயற்சி – சந்திரிகா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மாநாட்டுக்குத் தனக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், தன்னை ஓரம்கட்டுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், சுதந்திரக் கட்சியின் காப்பாளருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ரணிலையும், மைத்திரியையும் ஒரே அறைக்குள் அடைக்க வேண்டும் -ஜேவிபி

தற்போதைய அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும், ஒரு அறைக்குள் அடைத்து விட வேண்டும் என்று கூறியுள்ளார், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.

தீர்ப்புக்குப் பின்னரே அடுத்த அடுத்த நடவடிக்கை – ஐதேக முடிவு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே,  பிரதமரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா என்பது உள்ளிட்ட  அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கும் என்று என கட்சிப் பேச்சாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.