மேலும்

நாள்: 25th December 2018

கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரின் பதவிகளை பறிப்போம் – மகிந்த அணி சூளுரை

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எச்சரித்துள்ளது.

வடக்கு வெள்ள நிவாரணம், இழப்பீட்டுக்கு நிதியை விடுவிக்க உத்தரவு

இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் அதிகாரிகளை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கில் வெள்ளத்தினால் 72 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

சந்திரிகாவுக்கு அழைப்பு இல்லை – மகிந்த வரவில்லை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்துக்கு கட்சியின் காப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகிந்தவுடன் இணைந்து போட்டி – மைத்திரியின் அறிவிப்பினால் கட்சிக்குள் எதிர்ப்பு

வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு இடையூறு ஏற்படுத்தும், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.