மேலும்

நாள்: 15th December 2018

கூட்டமைப்பிடம் ‘றிமோட் கொன்ரோல்’ – சிறப்பு அறிக்கையில் மகிந்த சீற்றம்

நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐதேகவை, 14 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறது என்று சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார், மகிந்த ராஜபக்ச.

சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் தனியாக ஆலோசனை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சர்களின் பட்டியல் இன்று மைத்திரியிடம் கையளிப்பு

சிறிலங்காவின் புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் சற்று முன்னர். இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரு வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம் விட்டுப்பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி?- சமந்தா பவர் கூறும் காரணம்

சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வாவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – 2 கடற்படையினர் கைது

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, மேலும் இரண்டு சிறிலங்கா கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதவி விலகும் மகிந்தவின் முடிவுக்கான காரணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஒக்ரோபர் 26ஆம் நாள் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இன்று தனது பதவியை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார்.