மேலும்

நாள்: 10th December 2018

ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு? – இன்று முடிவு

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில்  ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரவுள்ள  நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மைத்திரியை இன்று சந்திக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது அணியினருடன் முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அரசியல் நெருக்கடிக்கு அனைத்துலக தலையீடுகளே காரணம் – கோத்தா

உள்நாட்டுப் படைகள் வலுவாகவும், நாட்டைப் பாதுகாக்கும் ஆற்றலுடனும் இருப்பதால், வடக்கிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தலையீடுகளால் அதிருப்தியில் மகிந்த

இப்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை இலகுவாக தீர்க்க முடியும் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றங்களிடம் இருப்பதால் பொறுமையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ரணிலுக்கோ, கட்சிக்கோ துரோகம் செய்யமாட்டேன் – சஜித் பிரேமதாச

பிரதமர் பதவிக்காக தான், ரணில் விக்கிரமசிங்கவையோ, கட்சியையோ காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுக்கும் பாதுகாப்புப் பிரிவுகள்?

நாடு தற்போது அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த அணி வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்

சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.