சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் தனியாக ஆலோசனை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவின் இல்லத்திலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவது குறித்தே இவர்கள் ஆலோசனைகளை நடத்தி வருவதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை.