ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்
சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை மறுநாள்- ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை மறுநாள்- ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாளை பதவியில் இருந்து விலகவுள்ளார்.
சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பெரும்பாலும் நாளை பதவியேற்பார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, மகிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருடன், தனியான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ நிலப்பரப்பு ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சர்களும், பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்படுவதற்குத் இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.