மேலும்

நாள்: 11th December 2018

உச்சநீதிமன்றம் மீதான அனைத்துலக ஆர்வம் – மகிந்த தரப்பு கொதிப்பு

நாடாளுமன்றக் கலைப்புக்கு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அனைத்துலக அமைப்புகள், இராஜதந்திரிகள் காட்டும் ஆர்வம், தொடர்பாக மகிந்த தரப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் – பிரித்தானிய தூதுவர்

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக சிறிலங்கா உச்சநீதிமன்றம் இந்தவாரம் வெளியிடப்போகும் தீர்ப்பு, வரலாற்றை உருவாக்கும் என்று பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு உளநலப் பரிசோதனை – நீதிமன்றில் மனு

அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந்து புதியதொரு சவால் எழுந்துள்ளது.

ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது – மகிந்த அணி வைக்கும் ‘செக்’

நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர், அமைச்சர்கள் பதவி நீக்கப்படவில்லை – என்கிறார் பீரிஸ்

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பணியில் ஈடுபடுவதற்கே மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர, அவர்களை சட்டரீதியற்றவர்கள் என்ற அறிவிக்கவில்லை என, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு – ஜனவரி 31 இல்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, எதிர்வரும் ஜனவரி 31ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாமதமின்றி தீர்ப்பை அளிக்குமாறு கோருகிறார் மைத்திரி

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தாமதமின்றி அறிவிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரிடம் கோரவுள்ளார்.

ரணிலை நீக்கியதற்கு எதிரான வழக்கு – ஜனவரியில் விசாரணை

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு எதிராக தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ள மனு மீதுான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 07ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளது.