மேலும்

நாள்: 27th December 2018

உட்கட்சிப் பூசல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வெளிநாட்டு குடியுரிமையை கைவிட முடிவு?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வெளிநாட்டுக் குடியுரிமையை விரைவில் கைவிடவுள்ளனர் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை

இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஏன் போராடுகிறது கூட்டமைப்பு?

நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

காசோலை மோசடி – மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் கைது

காசோலை மோசடி குற்றச்சாட்டில், மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் குற்ற விசாரணைத் திணைக்கள காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.