நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு – சட்டம், ஒழுங்கு அமைச்சு இழுபறியில்
புதிய அமைச்சரவை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவியேற்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்று மனோ கணேசன், றிசாத் பதியுதீன், மலிக் சமரவிக்ரம ஆகியோர் முடிவு செய்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை நியமிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால், புதிய அமைச்சரவை நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் வரவேற்றுள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனம் தாமதமடைந்து வரும் நிலையில் நிதி அமைச்சர் பதவி தொடர்பாக, ஐதேகவின் முக்கிய தலைவர்களான மங்கள சமரவீரவுக்கும், ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.