மேலும்

நாள்: 1st December 2018

திம்பு நோக்கி திரும்புவார்களா தமிழர்கள்?

அனைத்துலக வல்லரசுகள் தமது அதிகார செயல் வல்லமையை இன்னுமொரு அரசின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்கின் அடிப்படையில் உறுதிப்படுத்த முயல்கின்றன. வேறு ஒரு அரசு தனது இடத்தை இட்டு நிரப்பி விட முடியாதவகையில்  எப்பொழுதும் இயங்கி கொண்டிருக்கும் நிலையே  அனைத்துலக உறவாக பரிணமித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு அரசிதழை மீளப்பெறுகிறார் சிறிலங்கா அதிபர்?

நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் ஆம் நாள் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய அரசிதழ் அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் – சஜித் பிரேமதாச

தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில் மகிந்தவுடன் இருந்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

ஐதேமுவுடனான பேச்சில் இழுபறி – மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரி

தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன், நேற்றிரவு நீண்டநேரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்திய போதும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

புதிய பிரதமரை நியமிக்குமாறு பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி

புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.