மேலும்

மாதம்: November 2018

அனைத்துலக ஆதரவு தேடி இரகசியப் பேச்சுக்களில் ‘மொட்டு’ – அம்பலப்படுத்திய கனேடிய தூதுவர்

சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு இதுவரை அனைத்துலக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவர்கள், அனைத்துலக ஆதரவைப் பெறுவதற்கான இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்கெடுப்புக்கு வர முடியுமா? – மகிந்த அணிக்கு ரணில் சவால்

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்- முடிந்தால் வரும் 29ஆம் நாள், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மகிந்த ராஜபக்ச அணியினருக்கு சவால் விடுழுத்துள்ளார் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

அதிருப்தி அலையால் மகிந்த தரப்பு அதிர்ச்சி – தேர்தலுக்கான போராட்டத்தில் இறங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, நாடெங்கும் போராட்டங்களை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் ஐதேக

பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க மகிந்தவுக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை  சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

ஐதேமுவின் அடுத்த ‘செக்’  மகிந்தவின் அமைச்சர்களுக்கு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியம், மற்றும் பிற சலுகைகள், வசதிகளை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி இன்று சமர்ப்பித்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை உறுதி செய்தது நாடாளுமன்ற பதிவேடு

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 14ஆம் நாளும், 16ஆம் நாளும், நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்யும் நாடாளுமன்றப் பதிவேடு (ஹன்சார்ட்) அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க – அங்குமிங்கும் தாவுகிறார்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு எதிரான, அரசியல் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வண.தம்பர அமில தேரர்  சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.