மேலும்

அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க – அங்குமிங்கும் தாவுகிறார்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதேக அரசாங்கத்தில், வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக இருந்த வசந்த சேனநாயக்க, அண்மையில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

எனினும், அவரது இடத்துக்கு எவரும் நியமிக்கப்படாத நிலையில், இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அவர் மீண்டும் மகிந்த அணியின் பக்கம் சென்றுள்ளார் என்று கருதப்படுகிறது.

அதேவேளை, கடந்த வாரம் ஐதேகவுக்குத் திரும்பிய வடிவேல் சுரேசும் மீண்டும் மகிந்த ராஜபக்ச பக்கம் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வசந்த சேனநாயக்க கையெழுத்திடவில்லை

இதனிடையே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட 122 பேரில் வசந்த சேனநாயக்க இருக்கவில்லை என்றும், தமது பக்கம் இன்னமும் 122 உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *