அரசியல் குழப்பதாரிகளுக்கு பயணத் தடை, சொத்துக்கள் முடக்கம் – வெளிநாடுகள் திட்டம்?
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி தொடருமானால், இதற்குக் காரணமான அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது பயணத்தடை, மற்றும் சொத்துக்கள் மீதான தடைகளை விதிக்கும் முடிவுகளை எடுக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.




