மேலும்

மாதம்: November 2018

மகிந்தவைச் சந்தித்தார் பாகிஸ்தான் தூதுவர்

சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவையும், சபாநாயகர் கரு ஜெயசூரியவையும், பாகிஸ்தான் தூதுவர் கலாநிதி சாஹிட் அகமட் ஹஸ்மட் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடாது – சுசில் பிரேம ஜெயந்த

சிறிலங்கா நாடாளுமன்றம், வரும் திங்கட்கிழமை கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

மகிந்தவை சபாநாயகர் ஏற்கவில்லை – ஐதேக

சிறிலங்காவின் பிரதமராக, மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வீழும் சிறிலங்காவின் நாணயப் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்று சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 177.32 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளின் புதிய தூதுவர்கள் சிறிலங்கா அதிபரிடம் நியமனங்களை கையளிப்பு

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்தனர்.

திங்களன்று நாடாளுமன்றைக் கூட்டுகிறார் மைத்திரி – அழுத்தங்களுக்கு அடிபணிந்தார்

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 5ஆம் நாள்- திங்கட்கிழமை – கூட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

பீஜீங்கா- புதுடெல்லியா?: சிறிலங்காவின் தடுமாற்றம்

அரசியல் கொந்தளிப்பின்  மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக, சீன தலைவர் ஷி ஜின்பிங் இடம் பிடித்துள்ளார்.

அரசியலமைப்பு வரைவை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் – எல்லே குணவன்ச

முன்னைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, மைத்திரி- மகிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அரசியல் நகர்வுகள் ஆராய கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு நாளை கூடுகிறது

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், உயர்மட்டக் குழு நாளை அவசரமாக கூடி ஆராயவுள்ளது.

அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் வெளிநாடு – ஆதாரம் இல்லை என்கிறார் ரணில்

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்குப் பின்னால், வெளிநாடு ஒன்று இருப்பதாக நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.