மேலும்

மாதம்: November 2018

மைத்திரியை சந்தித்தது உண்மை, மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் – மல்கம் ரஞ்சித் ஒப்புதல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு தான் சென்றதை ஒப்புக் கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

மைத்திரியை இன்று சந்திக்கிறார் ரணில்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டு காத்திருந்தால் மூன்றில் இரண்டு பலத்துடன் பிரதமராகியிருக்கலாம் – கோத்தா

மகிந்த ராஜபக்ச இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மகிந்தவிடம் கோரவுள்ளது ஐதேக

சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை பிற்பகல் கூடும்போது, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு- சர்ச்சைக்குரிய சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், ஐக்கிய தேசிய முன்னணி கோரவுள்ளது.

இன்று பிற்பகல் அனைத்துக் கட்சிகளையும் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் அ்ங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மாலைதீவில் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் – மோடியையும் சந்திப்பு

மாலைதீவில் புதிய அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில்- சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் குதிரை பேரம் – 3 மில்லியன் டொலருக்கு விலை பேசப்படும் எம்.பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும்  குதிரை பேரத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற மகிந்த முன்வைக்கும் 12 வழிமுறைகள்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முறைப்படி நிறைவேற்றுவதற்கு 12 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு நம்பிக்கையில்லா பிரேரணையையும் எதிர்கொள்ளத் தயார் – சிறிலங்கா அரசாங்கம்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக முறையாக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று, ஆளும்தரப்பு உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு துணை நின்ற மல்கம் ரஞ்சித், சரத் என் சில்வா, மகிந்த தேசப்பிரிய

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று லங்காதீப சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.