மேலும்

அர்ஜூன ரணதுங்கவை தாக்க முயற்சி – பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் மூவர் காயம்

கொழும்பு- தெமட்டகொடவில் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இன்று பிற்பகல் வந்த, முன்னாள் பெற்றோலிய  வளங்கள் அமைச்சரான அர்ஜூன ரணதுங்கவுக்கு, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரைத் தடுத்து வைத்தனர்.இதனால் பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது, அர்ஜூன ரணதுங்க மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்கள் மீது, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *