மேலும்

மாதம்: July 2018

டெனீஸ்வரன் வழக்கு – உச்சநீதிமன்றத்தை நாடினார் முதலமைச்சர் விக்கி

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர்.

நல்லிணக்கத்தை குழப்புவோர் சிறிலங்கா படை முகாம்களுக்குள் நுழைய தடை

நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை

அமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் ‘திரிகண்ட்’ போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ என்ற போர்க்கப்பல், நல்லெண்ணப் பயணமாக, கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்திய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.

கடன் பொறி என்பது மேற்குலக ஊடகங்களின் பொய்க் குற்றச்சாட்டு – சீனா கூறுகிறது

கடன் பொறி என்பது, மேற்குலக ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்யான பரப்புரை என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரக, பேச்சாளர்  லூ சோங் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையை தருமாறு சீனா அழுத்தம் கொடுக்கவில்லை – சிறிலங்கா பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

தேர்தலில் குதிக்கப் போகிறீர்களா? – அருட்தந்தை இம்மானுவேலிடம் கேட்ட முதலமைச்சர்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்று தம்மிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார், உலகத் தமிழர் பேரவையின் தலைவரான அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்.

சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவை அடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து, விஜயகலா மகேஸ்வரன் விலகியுள்ளார்.

கரும்புலிகள் நினைவு கூரல்- அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறை

கரும்புலிகள் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று அங்காங்கே சில நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.