மேலும்

நாள்: 26th July 2018

விக்னேஸ்வரனின் மனு மீதான விசாரணை செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு

வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரனைப் பதவி நீக்கம் செய்த தமது உத்தரவை இடைநிறுத்தி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வட மாகாண முதலமைச்சர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு செப்ரெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வருகிறது சீனாவின் உயர்மட்டக் குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மன்னார் புதைகுழியில் இதுவரை 54 எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னாரில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 53 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக, சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விஜயகலாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அடுத்த மாதம் முடிவு

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவையும் சீனாவையும் சமனிலைப்படுத்த முயற்சி – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் முதலீட்டுத் திட்டங்களில் இந்தியாவையும், சீனாவையும் சமநிலைப்படுத்த முனைவதாக, சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பேச்சு

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரிவசம் விளக்கமளித்துள்ளார்.

இராணுவத்தில் மூக்கை நுழைக்கிறார் சரத் பொன்சேகா – சிறிலங்கா அதிபரிடம் முறைப்பாடு

சிறிலங்காவின் இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குமார் சங்கக்காரவுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு

சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தீவிர அரசியலில் நுழைந்தால், அவருக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு அளிக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய- சீன இராஜதந்திர இழுபறிகளால் வீடமைப்புத் திட்டம் முடக்கம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்களால், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.