மேலும்

நாள்: 24th July 2018

போர்த்தளபாட விற்பனை குறித்துப் பேச கொழும்பு வருகிறார் ரஷ்ய ஆயுத வணிகர்

சிறிலங்காவுக்கு போர்த்தளபாடங்களை விற்பனை செய்வது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்காக, ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான, Rosboronoexport நிறுவனத்தின் தலைவர்  நிக்கி அலெக்ஸ்சான்ட்ரோவா அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளார்.

இந்தியாவின் பங்கை கணிப்பிடுவது கடினம் – முதலமைச்சர்

சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

நீரிழிவு நோயைத் தடுக்கும் புதிய அரிசியை அறிமுகப்படுத்துகிறது சிறிலங்கா

நீரிழிவு நோயைத் தடுக்கக் கூடிய புதிய நெல் இனத்தை சிறிலங்கா அறிமுகப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நிலையிலேயே, இந்த புதிய நெல் இனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினர் – என்கிறார் தளபதி

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு சம்பந்தனை அழைத்தார் மகிந்த

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் அமெரிக்க இராணுவ ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கறுப்பு ஜூலை நினைவேந்தல் – இரங்கல் தெரிவித்தார் கனேடியப் பிரதமர்

சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும், கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக, கனேடியப் பிரதமர்  ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் சீனா – போர்க்கப்பலையும் வழங்குகிறது

சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

எதிர் மனுக்களைத் தாக்கல் செய்ய முதலமைச்சருக்கு கால அவகாசம்

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தம்மை நீக்கியதற்கு எதிராக, டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீது, அளிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு, ஓகஸ்ட் 8ஆம் நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.