மேலும்

நாள்: 14th July 2018

ஊடகங்கள் கூறுவது போல வடக்கில் மோசமான நிலை இல்லை – ரஞ்சித் மத்தும பண்டார

ஊடகங்களாலும், அரசியல் எதிரிகளாலும் கூறப்படுவது போன்று, வடக்கில் ஒன்றும் மோசமான நிலை இல்லை என்று, சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு நீர்மூழ்கிகளால் அச்சுறுத்தல் – ஒப்புக்கொள்கிறார் பிரதமர் ரணில்

எதிர்வரும் காலங்களில், நீர்முழ்கி கப்பல்களின் அச்சுறுத்தல்களை சிறிலங்கா எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வரிடம் தகவல் பெறும் அவசியம் இராணுவத்துக்கு இல்லை – பிரிகேடியர் அத்தபத்து

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் சிறிலங்கா இராணுவத்தினருக்குக் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலையீட்டினால் சிறிலங்காவுக்கு அநீதிகள் – நவீன் திசநாயக்க

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் சிறிலங்கா பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டது என்று ஐதேகவின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன் புதிய அரசியலமைப்பு – இந்தியாவிடம் வலியுறுத்திய சம்பந்தன்

மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேயிடம், வலியுறுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மன்னார் புதைகுழியில் இதுவரை 38 எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை 38 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விஜயகலா உரையின் சிங்கள, ஆங்கில மொழியாக்க வடிவங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகள் தொடர்பான விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையின் சிங்கள, அங்கில மொழிபெயர்ப்புகளை வழங்குமாறு அரசாங்க மொழிபெயர்ப்பு திணைக்களத்துக்கு கோட்டு நீதிவான் நீதிமன்ற நீதிவான், ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் திட்டங்களை இந்த ஆண்டில் ஆரம்பிக்க சிறிலங்கா இணக்கம்

இந்தியாவின் உதவி மற்றும் முதலீட்டிலான  திட்டங்கள் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.