மேலும்

நாள்: 27th July 2018

அதிபர் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவு இல்லை – சரத் பொன்சேகா

அடுத்த அதிபர் தேர்தலில் போது வேட்பாளரைத் தாம் ஆதரிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

சூரியவெவ மைதானத்தின் பக்கம் திரும்பும் இந்தியாவின் கவனம்

அம்பாந்தோட்டை- சூரியவெவவில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச துடுப்பாட்ட மைதானத்தை, இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து தனியார் அரசபங்குடைமையாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தை வாங்கும் திட்டம் இல்லை – கைவிரித்தது இந்தியா

சிறிலங்காவின் மத்தல விமான நிலையத்தைக் கட்டுப்படுத்தும் பங்குகளை வாங்குவது தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோத்தா கொலை முயற்சி வழக்கு – 12 ஆண்டுகளின் பின் இந்துக் குருக்கள் விடுதலை

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்துக் குருக்கள் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.