மேலும்

நாள்: 2nd July 2018

ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்

சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பான் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக இந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் – கூட்டமைப்பு

பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் சீர்திருத்தங்களை சிறிலங்கா அசாங்கம் செயற்படுத்த வேண்டும் அல்லது தாமதமின்றி பழைய தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டும் என்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வடக்கில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள் – சிறிலங்கா அதிபருக்கு முதலமைச்சர் கடிதம்

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச.

மத்தலவுக்கு மீண்டும் விமானங்கள் வரும் – என்கிறார் சிறிலங்கா பிரதமர்

மத்தல விமான நிலையத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை – சிறீதரன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

மகிந்தவை இணைத் தலைவராக நியமிக்க முடியாது – லக்ஸ்மன் பியதாச

மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத் தலைவராக நியமிக்க முடியாது என்று, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

மகிந்த தலைமையில் இன்று இரண்டு முக்கிய கூட்டங்கள்

கூட்டு எதிரணி மற்றும் 16 பேர் அணியின் இரண்டு முக்கிய கூட்டங்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.