மேலும்

நாள்: 1st July 2018

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – கனடா

சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கன் விமான சேவை பயணங்கள் தடைப்படும் அபாயம்

சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.

நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு – கொழும்பு அரசியலில் பரபரப்பு

2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதப்படைகளுக்கான பயிற்சி – பாகிஸ்தான் தளபதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

ஆயுதப் படைகளுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் சுபைர் மகமூட் ஹயட்டும் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றம்

சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இடம் மாற்றப்படும் என்று  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலகம் அறிவித்துள்ளது.