மேலும்

நாள்: 16th July 2018

ஈபிடிபி ஜெகன் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்பட நீதிமன்றம் தடை

ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெகன் எனப்படும், வேலும்மயிலும் குகேந்திரன், யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியை நிராகரித்த எசல வீரக்கோன்

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராக பொறுப்பேற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை துறை சார் இராஜதந்திரியான எசல வீரக்கோன் நிராகரித்துள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்

மேன்முறையீட்டு நீதிமன்றில் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பை அடுத்து எழுந்துள்ள சூழ்நிலைகள் தொடர்பாக- வட மாகாண சபையின்  சிறப்பு அமர்வில் இன்று விவாதம் நடத்தப்பட்டது.

கொழும்பில் கடலை நிரப்பி 85 ஏக்கரில் கடற்கரைப் பூங்கா

கொழும்பு நகரில், கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெகிவளை வரை, கடலை நிரப்பி, கடற்கரைப் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. 300 மில்லியன் டொலர் செலவில் இந்தத் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். 

அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சிறிலங்காவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு நேற்றிரவு – தனது குடும்பத்தினருடன் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் சிறிலங்கா இராணுவம் மூடப் போவதில்லை என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு

காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது.