மேலும்

நாள்: 11th July 2018

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது ரஷ்யா

சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்கு, ரஷ்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கோத்தாவைத் தோற்கடிக்க ‘றோ’ திட்டம் – கூட்டு எதிரணிக்குள் ஊடுருவல்

கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

டெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு அரசியலில் குழப்பநிலை

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிக்கிறார்  என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, வடக்கு மாகாண அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.

அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம்

அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.

விக்னேஸ்வரனின் உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்தது நீதிமன்றம்

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து. டெனீஸ்வரனை நீக்கிய  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் அரசிதழ் மீதான இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில் இவர்கள் பதவியேற்றுள்ளனர்.

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது

சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயகலாவின் உரை – விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.