மேலும்

நாள்: 21st July 2018

இராணுவத் தேவைக்கு மத்தல விமான நிலையத்தை இந்தியா பயன்படுத்த முடியாது – சிறிலங்கா

மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜப்பான்- சிறிலங்கா இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா- ஜப்பான் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில்ட இடம்பெற்றது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய மகிந்த – விசாரணைக்கு கோரிக்கை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு, வழங்கப்பட்ட நிதி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு 160 கோடி ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா

நல்லிணக்க செயல்முறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, அமெரிக்கா 160 கோடி ரூபாவை (10 மில்லியன் டொலர்) சிறிலங்காவின் சிவில் அமைப்புகளுக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.

மன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக, சட்ட மருத்துவ அதிகாரி டி.சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அரசியல் கைதிக்கு ஒரு மணி நேரம் அனுமதி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 13 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் நேற்று தமது தந்தையாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னான்டோ

இந்தியாவுக்கான புதிய தூதுவர் பதவிக்கு ஒஸ்ரின் பெர்னான்டோவின் பெயர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால்  முன்மொழியப்பட்டுள்ளது.

விஜயகலாவை விசாரிக்க சபாநாயகரிடம் அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.

றிவிர வாரஇதழ் இணை ஆசிரியரிடம் 4 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை

றிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.