மேலும்

நாள்: 13th July 2018

சம்பந்தனுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்க சம்பந்தனிடம் தாய்லாந்து பிரதமர் உறுதி

தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கும்படி, தாய்லாந்துப் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சாவிடம்,  எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு தகவல்களை வழங்கக்கூடாது – முதலமைச்சர் உத்தரவு

தமது ஆலோசனையைப் பெறாமல், சிறிலங்கா இராணுவத்தினர் கேட்கும் எந்த தகவலையும் வழங்கக் கூடாது என்று, வட மாகாணசபை அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

இளைஞர்களை கடத்தப் பயன்படுத்திய வாகனம் – விபரம் தர மறுக்கும் சிறிலங்கா கடற்படை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பான தகவல்களை சிறிலங்கா கடற்படை இன்னமும் தமக்கு வழங்கவில்லை என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுகள் யாழ்., கிளிநொச்சியில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு – உடன்பாடுகளும் கைச்சாத்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தூக்கிலிடுபவர்களை நியமிக்க நடவடிக்கை

சிறிலங்காவில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்கிலிடுபவர் (அலுகோசு) பதவிக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படவுள்ளது.

மரணதண்டனைக்கு பௌத்த பீடங்கள், கத்தோலிக்க திருச்சபை ஆதரவு

மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடும் நடைமுறையை மீண்டும் கொண்டு வர, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு தெரிவித்துள்ளது.