மேலும்

நாள்: 23rd July 2018

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க ஜெனரல் சந்திப்பு

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி, ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் தலைமையிலான குழுவினர், இன்று சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர்.

வடக்கிலுள்ள சிறிலங்கா படைமுகாம்கள் மூடப்படாது – ரணில்

வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் எதுவும். உடனடியாக அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொள்வனவு?

சிறிலங்கா கடற்படைக்கு தாய்லாந்திடம் இருந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி, சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவை – டிசம்பருக்குள் ஆரம்பிக்க முடிவு

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு 4800 கோடி ரூபா கொடையை அறிவித்து சீனா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு,  சீன அதிபர் ஷி ஜின்பிங்,  சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார்.

அமெரிக்க ஜெனரல் சிறிலங்காவில் ‘இரகசியப் பேச்சு’?

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

வடக்கு வங்கிகளில் 100 பில்லியன் ரூபா – குறிவைக்கும் சிறிலங்கா பிரதமர்

வடக்கில் உள்ள வங்கிகளில் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முதலிடம் – வெடித்தது சர்ச்சை

சிறிலங்காவில் அரச நிகழ்வு ஒன்றில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.