மேலும்

மாதம்: June 2018

தலைமன்னார் இறங்குதுறையை ஆய்வு செய்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

சிறிலங்காவுக்கான இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டு, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

சிறிலங்காவின் 40 வீத கட்டுமானப் பணிகள் சீனாவின் கையில் – 70 வீதத்தை கைப்பற்ற குறி

சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

ஜேவிபியின் நிறுவக தலைவரான றோகண விஜேவீரவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது மனைவி ஐராங்கனி விஜேவீர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சர், அனந்தி, சிவநேசன் பதவி விலகுவது நல்லது – டெனீஸ்வரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தவறைச் சுட்டிக்காட்டவே அவரது உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன் என்று வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டெனீஸ்வரனை நீக்கிய வடக்கு முதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை நீக்கிய, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவுக்குத் இடைக்காலத் தடை விதித்துள்ளது சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம்.

அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடு பெரிதாக இருக்காது – மகிந்த நம்பிக்கை

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் மேற்குலகின் தலையீடுகள் மிகப் பெரியதாக இருக்காது என்று எதிர்வு கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இழப்பீட்டுப் பணியக சட்டமூலம் அரசிதழில் வெளியீடு

இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பான சட்டமூலம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசிதழ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு

கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.

அதிபர் தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் மகிந்த பெற்ற தேர்தல் நிதி ஐக்கிய அரபு எமிரேட்சில் – திலக் மாரப்பன விசாரணை

கடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.