மேலும்

நாள்: 29th July 2018

மகிந்தவிடம் ஆதரவு கோரினேன் – இரா.சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஆதரவு கோரியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மத்தல விவகாரத்தில் இந்தியாவின் குழப்பம் – அடுத்தவாரம் பதிலளிக்குமாம் சிறிலங்கா

மத்தல விமான நிலைய விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து இந்தவாரம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்கும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்கால வெளிவிவகாரக் கொள்கை மீது மகிந்த கவனம் – முன்னாள் தூதுவர்களுடன் ஆலோசனை

எதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு, முன்னைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

சுமந்திரனைக் கொல்லச் சதி – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாளை குற்றப்பத்திரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய, இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நடவடிக்கை

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளன.

உயர்தரத் தேர்வின் போது இலத்திரனியல் கருவிகளை முடக்க சிறிலங்கா இராணுவம் உதவி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள கபொத உயர்தரத் தேர்வின் போது, தேர்வு மண்டபத்தில் மாணவர்கள் தொலைபேசி மற்றும் நவீன இலத்திரனியல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவதை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.