மேலும்

சாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு

India-emblemவெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாடு இன்று புதுடெல்லியில் உள்ள சாணக்யபுரியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது.

இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவாகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்  ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந்த மாநாட்டில், பிரித்தானியா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா, கனடா, சிறிலங்கா, கென்யா, பிஜி,  மொறிசியஸ், நியூசிலாந்து உள்ளிட்ட 23 நாடுகளின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்திய சமூகத்தினரான 124 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 17 மாநகர முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.

கயானாவில் இருந்தே பெரிய குழு பங்கேற்கிறது. இங்கிருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று மாநகர முதல்வர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து இரண்டு மாநகர முதல்வர்கள் மாத்திரம் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டுக்கு சிறிலங்கா தவிர்ந்த ஏனைய சார்க் நாடுகளின் இந்திய சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *