அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு முதல் கப்பல் வந்தது
அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர், முதலாவது கப்பல், இறங்குதுறைக்கு வந்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர், முதலாவது கப்பல், இறங்குதுறைக்கு வந்துள்ளது.
சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதித்த தடை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிமல் லான்சா, நேற்று அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியில் புளொட் மூத்த உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து, துப்பாக்கிகள், ரவைகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை காலதாமதம் செய்யாமல் விரைவாகத் தாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்புபட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து, சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்கவிடம், நேற்று நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாநகர முதல்வர் பதவிக்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வடமாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்ட் களமிறங்குவதாக வெளியான செய்திகளை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் மறுத்துள்ளார்.