மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்

FS Auvergne at the Colombo (1)பிரெஞ்சுக் கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட போர்க்கப்பலான FS Auvergne  நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

புதிதாக கட்டப்பட்ட பல நோக்குப் போர்க்கப்பலான FS Auvergne இந்தியப் பெருங்கடலில் முதலாவது நடவடிக்கைப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

ஓகஸ்ட் 18ஆம் திகதி ரோலோன் துறைமுகத்தில் இருந்து, புறப்பட்ட இந்தப் போர்க்கப்பல் இந்தியாவின் கர்வார் கடற்படைத் தளத்துக்கு ஒக்ரோபர் மாதம் சென்றிருந்தது. அங்கிருந்து நேற்று கொழும்புக்கு வந்துள்ளது.

இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினரும், பிரெஞ்சுத் தூதரக அதிகாரிகளும் கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

FS Auvergne at the Colombo (1)

FS Auvergne at the Colombo (2)

142 மீற்றர் நீளமான இந்தப் போர்க்கப்பலில், Aster மற்றும் Exocet MM ரகத்தைச் சேர்ந்த 40 ஏவுகணைகள் , MU 90 டோபிடோக்கள், உள்ளன.

27கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்தப் போர்க்கப்பல் தொடர்ந்து 6000 மைல்களுக்குப் பயணம் செய்யக் கூடியது.

உலங்குவானூர்தி அணியொன்றையும் உள்ளடக்கிய இந்தப் போர்க்கப்பலில், 142 பிரெஞ்சு மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *