டியாகோ கார்சியாவில் இலங்கையர்கள் தடுப்பில் இல்லை
டியாகோ கார்சியாவில் இருந்து, அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்த பிரதேசத்தில் குடியேறியவர்கள் தடுப்புக்காவலில் இல்லை என்றும் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்றும் கூறினார்.
புலம்பெயர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை ஆதரிப்பதற்கும், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பிரித்தானிய அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகேகாசியா தீவை, அங்குள்ள இராணுவத் தளத்தை இயக்கும் அமெரிக்காவிற்கு பிரித்தானியா குத்தகைக்கு வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் இருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் பல மாதங்களாக அங்கு தங்கி உள்ளனர்.