கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு
சிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
நாளை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 20ஆம் நாள் இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படும் என்றும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.