சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் நேற்று கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதையடுத்து, வணிகர்கள் பொருட்களை பதுக்க ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையிலேயே, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.