மேலும்

அமைதிக்கான நோபல் பரிசு சிறிலங்கா அதிபருக்கு கிடைக்குமா? – இன்று அறிவிப்பு

maithri-met-missing (1)2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இம்முறை நோபல் பரிசு குறித்து கொழும்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குரிய போட்டியாளர்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராக இருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருடன், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கல், சிரியாவின்  வைட் ஹெல்மெட்ஸ் அமைப்பு, மனித உரிமைகள் சட்டவாளர் மொல் குளோனி, அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் மற்றும் அதன் தலைவர் சூசன் ஹேர்மன் உள்ளிட்டோர் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குரிய போட்டியாளர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஒஸ்லோ நேரப்படி இன்று காலை 11 மணிக்கு இந்தப் பரிசு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். 1.1 டொலர் பெறுமதி கொண்ட அமைதிக்கான நோபல் பரிசு, வரும் டிசெம்பர் 10ஆம் நாள் ஒஸ்லோவில் நடக்கும் நிகழ்வில் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *