மேலும்

சிறிலங்கா படைகளுடனான கூட்டுப் பயிற்சிகள் அதிகரிக்கும் – அமெரிக்கா

Robert Hiltonஅமெரிக்க- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் கடந்த 2ஆம் நாள் தொடங்கி இன்றுடன் முடிவடையவுள்ள அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான CARAT-2017என்ற முதலாவது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கம்,  நீதி மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் தொடர்ந்து முன்னேற்றத்தை காட்டி வருகிறது.

இதுபோன்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய எமது படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ச்சியடையும்” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இரு இருதரப்பு மற்றும் பலதரப்பு கடல்சார் பாதுகாப்புப் பணிகளை விரிவாக்குவதற்கான எமது பாரிய முயற்சியின் ஒரு பகுதியாக, CARAT பங்காளர்களின் பட்டியல்களில் ஒருவராக சிறிலங்காவை இணைத்துக் கொள்வதில் அமெரிக்க கடற்படை மகிழ்ச்சியடைகிறது என்று அதிரடிப்படை-75 இன் தளபதியான கொமடோர் ரொபேர்ட் போக்மன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *