மேலும்

மாதம்: September 2017

சிறிலங்காவில் இந்தியப்படை அதிகாரிகளின் உயர்மட்டக் குழு

இந்திய இராணுவ உயர் கட்டளை கற்கைநெறி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. எயர் கொமடோர் சுரேஸ் ஹொல்லன்னாவர் தலைமையிலான இந்தக் குழுவின் இந்தியாவின் முப்படை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மட்ட பேச்சில் இணக்கம்

இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட 4 ஆவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 9ஆம் நாள் சிறிலங்கா கடற்படையின் கடல் பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் கருத்தரங்கான ‘காலி கலந்துரையாடல்-2017’, வரும் ஒக்ரோபர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.  இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ நடாத்தப்படுகிறது.

தொடர்ந்து போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இடைக்கால அறிக்கை – முதலமைச்சர்

அரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே  எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி, பௌத்தத்தை ஏற்க சிறுபான்மைக் கட்சிகள் இணக்கம்- என்கிறார் சிறிலங்கா பிரதமர்

கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு பிரதான கட்சிகள் இணங்கினால், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்தத்துக்கான முன்னுரிமையையும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதைப் பரிசீலிக்க  சிறுபான்மைக் கட்சிகள் தாயாராக இருக்கின்றன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு மீது பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- அஸ்கிரிய பீடம் வலியுறுத்தல்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய அரசியலமைப்பு மீது பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம் என்று, அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா காவல்துறை திணைக்களத்தில் சேர்ந்து கொள்வதில் தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த கொள்கையை வகுக்கவுள்ளதாம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படையினர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

எல்லைநிர்ணயப் பணிகள் முடிந்த பின்னரே மாகாணசபைகளுக்கு தேர்தல்

எல்லை மீள்நிர்ணயப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது என்று  சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.