சிறிலங்காவில் மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் – அமெரிக்க செனட்
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குராம் டஸ்ட்கிர் கான் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் 19ஆம் நாள் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடர், தற்போது நடந்து வருகிறது.
விமானப்படை, கடற்படையினரின் பங்களிப்புடன், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தும் நீர்க்காகம் போர்ப் பயிற்சி நேற்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெற்றது.
இந்திய மாக்கடல் மீதான தலையீட்டை சீனா தொடர்ந்தும் விரிவுபடுத்தி வரும் நிலையில், இப்பிராந்தியத்தின் தலைமைப் பொறுப்பைத் தன் வசம் தக்கவைத்திருப்பதற்கான நகர்வுகளில் இந்தியா ஈடுபடுகிறது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா கடல் சார் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தனது கடல் நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னலைப் பலப்படுத்தி வருகிறது.
2015ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தின் இலக்குகளை நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள மேற்குலக நாடுகள், இந்தப் பணியகத்துக்கு நம்பகமான ஆணையாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
சிறிலங்கா பல்வேறு பரப்புகளில் இன்னமும் மறுசீரமைப்புகளை செய்ய வேண்டியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா பிரதமரிடம் தெரிவித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் நாள் வழங்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்றத்தின் சிறப்பு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்துவதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.